உலகம் முழுவதும் நேற்று (நவம்பர் 14ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா தனது நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் தந்தாலும் படத்தின் திரைக்கதை படத்தின் வசூலை பாதிக்கும் போல் தெரிகிறது. அதே சமயம் படத்தின் பின்னணி இசை சத்தமாகவும் இரைச்சலாகவும் அமைந்து ரசிகர்களுக்கு எரிச்சலை தந்துள்ளது. அதேபோல் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கத்தி கத்தி காது கிழிந்துள்ளதாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் புஷ்பா 2 திரைப்படம் இந்த விஷயத்தில் முன்கூட்டியே உஷாராகிவிட்டது. அதாவது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் பகத் பாசில் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருக்கும் புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளில் இசையமைப்பாளர் தமன் பணியாற்றி வருவதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -