யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானைகள் பெள்ளியம்மாள் மற்றும் அவரது கணவர் பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்டன. யானைகளை தனது குழந்தை போல் வளர்த்த தம்பதிகளின் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்நிலையில், தான் வளர்த்து வேறு பாகனிடம் விடப்பட்ட பொம்மி, ரகு யானைகளை பெள்ளியம்மாள் நேரில் சந்தித்தார்.
யானைகளுக்கு முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பெள்ளியம்மாள் யானைகளை நேரில் பார்த்ததால், அவற்றுக்கு முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். யானைகளுக்கும் பெள்ளியம்மாளுக்குமான பாசப் பிணைப்பைக் கண்டு அருகிலிருந்தவர்ள் நெகிழ்ச்சி அடைந்தனர்.