Homeசெய்திகள்சினிமாஹோம்பலே நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹோம்பலே நிறுவனத்தின் புதிய அறிவிப்பு….. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

ஹோம்பலே நிறுவனம் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளது.ஹோம்பலே நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹோம்பலே நிறுவனம் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் கே ஜி எஃப் 1 மற்றும் 2 , சலார் 1, காந்தாரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறது. அடுத்தது காந்தாரா 2 திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரபாஸின் அடுத்த அடுத்த மூன்று படங்களை தயாரிக்கப் போவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தது. அதன்படி சலார் 2 படத்தின் மூலம் இந்த பயணம் தொடங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹோம்பலே நிறுவனம். அந்த அறிவிப்பின்படி நாளை (நவம்பர் 16) மதியம் 3.33 மணி அளவில் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ஹோம்பலே நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!அந்த போஸ்டரில் “நம்பிக்கை சவாலாக மாறும்போது அவர் தோன்றுவார்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்தி, கன்னடம், தெலுங்கு ,தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களிடையே இது என்ன படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளது.

MUST READ