பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது
பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நினைவிருக்கா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல், சமூக வலைதளங்களில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலான் ஆகியோர் பாடியுள்ள இப்பாடலுக்கு, ரசிர்கள் இடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.