HomeBreaking Newsஇண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

-

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானியின் துரித நடவடிக்கையினால்  பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு, பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி சென்று கொண்டு இருந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக, சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 11.30 மணி அளவில் புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட 177 பேர் இருந்தனர்.

இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திருப்பதி வான் வெளியில், நடுவானில் பறந்து கொண்டு இப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார். இதை அடுத்து விமானி அவசரமாக, ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, நிலைமையை கூறியதோடு, விமானத்தை அவசரமாக தரை இறக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதை அடுத்து கட்டுப்பாட்டுஅறை அதிகாரிகள், திருப்பதி விமான நிலையத்தில், விமானத்தை அவசரமாக தரையிறக்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதால், சென்னைக்கு சென்று, விமானத்தை அவசரமாக தரையிறக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று மதியம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்தப் பணி உடனடியாக முடிவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம், சென்னையில் இருந்து திருப்பதிக்கு அனுப்புவதற்கு, சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

விமானத்தில் ஏற்பட்ட இந்திரக்கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்த 169 பயணிகள் உட்பட 177 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேர் படுகொலை… பாஜக அரசை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

MUST READ