பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த சிறுமி , திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி ( 12).
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6- ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று காலை பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென சிறுமி மயங்கி கீழே விழுந்துள்ளார். மகள் கீழே விழுந்ததை கண்ட பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனை அடுத்து ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.