Homeசெய்திகள்சினிமாகங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு - கொந்தளித்த ஜோதிகா..!!

கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு – கொந்தளித்த ஜோதிகா..!!

-

கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு - கொந்தளித்த ஜோதிகா..!!
கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பாகுபலி அளவிற்கு ஹிட் கொடுக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் வெளியானது. சூர்யாவின் நடிப்பு மற்றும் உழைப்பு பாராட்டும்படியாக இருந்தாலும் படம் அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. திரைக்கதையில் சொதப்பல், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பார்வையாளர்களின் காதுகளை கிழிய வைக்கும் அளவிற்கு இரைச்சல் அதிகமாக இருக்கிறது என நெட்டிசன்கள் புலம்பித் தள்ளினர். இதனையடுத்து இரைச்சல் பிரச்சனையை சரிசெய்ய வால்யூமை, 2 பாயிண்ட் குறைக்கும்படி திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேட்டுக் கொண்டார்.

'கங்குவா 2' படத்தின் ஷூட்டிங் எப்போது? ரிலீஸ் எப்போது?
இருப்பினும் கங்குவா படம் குறித்த நெட்டிசன்களின் விமர்சனம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் இந்த அறிக்கையை ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் மட்டுமே எழுதுகிறேன். சூர்யாவின் மனைவியாக அல்ல.

கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு - கொந்தளித்த ஜோதிகா..!!

சூர்யா, ஒரு நடிகராக சினிமனை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் எப்படி கணவு காண்கிறீர்கள் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அரைமணி நேர படத்திற்காக ஒட்டுமொத்த 3 மணிநேர படத்தையும் குறை சொல்வதா?

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் கங்குவா சிறந்த சினிமா அனுபவம் கொண்ட படம். காட்சி ஒளிப்பதிவுகள் இதுவரை தமிழ் சினிமாவில் காணாத ஒன்று. ஊடகங்கள் மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு - கொந்தளித்த ஜோதிகா..!!

மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? பெண்களை பிந்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் என அறிவுக்கு மாறாக எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அளவிற்கு விமர்சனங்கள் வரவில்லை. படத்தை ரிவ்யூ செய்வதில் அவர்கள் நல்ல விஷயங்களை சொல்ல மறந்துவிட்டனர். கங்குவா முதல் ஷோ முடியும் முன்னரே விமர்சனங்கள் வரத்தொடங்கி விட்டது. இது பல குழுக்கள் இணைந்து திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக தெரிகிறது.

கங்குவா படக்குழு பெருமையுடன் இருங்கள். எதிர்மறையான கருத்துக்களை சொல்பவர்கள்  சினிமாவை உயர்த்துவதற்காக எதுவுமே செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ