Homeசெய்திகள்கட்டுரைமகாராஷ்டிரா தேர்தல்; மக்கள் யார் பக்கம்? - வாழ்வா சாவா போரட்டத்தில் அரசியல் வாதிகள்

மகாராஷ்டிரா தேர்தல்; மக்கள் யார் பக்கம்? – வாழ்வா சாவா போரட்டத்தில் அரசியல் வாதிகள்

-

உறவுகள், துரோகங்கள் எது வெற்றிப்பெற போகிறது என்று தெரியவில்லை. இதில் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற செல்வாக்கை நிரூபிக்க இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மராட்டிய தேர்தலில் பிளவு பட்ட இரண்டு சிவசேனா மற்றும் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர் எதிர் அணியில் மோதிக் கொள்ளும் நிலையில், மக்களின் செல்வாக்கை நிரூபிக்க இரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. 5 ஆண்டு கால ஆளும் அரசின் மீதான அதிருப்தி, பாஜக.வின் துரோக அரசியல் ஆகியவை இந்த தேர்தல் களத்தில் பேசுபொருளாக உள்ளன..

நாடே ஆவலுடன் உற்று நோக்கும் மராட்டிய சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 20 தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியாக பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மகாயுதி கூட்டணியாகவும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவர் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் ஆகியவை மகா விகாஸ் அகாதி கூட்டணியாகவும் களத்தில் உள்ளன. மராட்டியத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரண்டு அணிகளாக பிளவு பட்டு எதிரெதிர் அணியில் களத்தில் நிற்கின்றன.

இதில் பாஜக கூட்டணியில் உள்ள சிவ சேனா விற்கும் தேசியவாத காங்கிரத்திற்கும் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மற்ற இரண்டு கட்சிகளும் பொது சின்னத்தில் போட்டியிடுகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் தேர்தலை சந்தித்த மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது். 17 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றது.அதே எதிர்பார்ப்பு தற்பொழுது இந்த தேர்தலிலும் நிலவுகிறது.

இரு கட்சிகளை உடைத்து பாஜக மேற்கொண்ட துரோக அரசியல், ஐந்து ஆண்டு காலமாக நீடித்த நிலையற்ற ஆட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினரால் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டன இதனை முறியடிக்கும் விதமாக பாஜக கூட்டணியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மராட்டியத்தில் பாஜக 148 தொகுதிகளிலும் சிவசேனா ஷிண்டே அணி 83 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவர் அணி 54 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

அதே வேளையில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 103 இடங்களிலும் சிவசேனா உத்தவ் அணி 94 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி 87 இடங்களிலும் போட்டியிடுகின்றது. இதில் பாஜகவும் காங்கிரசும் நேரடியாக 75 தொகுதிகளில் மோதுகின்றன. இதே போல் பிளவுபட்ட இரண்டு சிவ சேனாக்கள் 50 தொகுதிகளிலும் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் 38 தொகுதிகளிலும் நேரடியாக எதிர்கொண்டுள்ளன.இந்த தொகுதிகளில் எதிர் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மக்கள் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே கட்சியை கைப்பற்ற முடியும் என இரு அணிகளும் நம்புகின்றன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மராட்டியத்தில் போட்டி கடுமையாக உள்ளது.

MUST READ