மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்துக்கு கடந்த 2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பு சார்ந்த விவகாரத்தில் தவறாக நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்ட காரணத்துக்காக இந்தியா கடுமையான அபராதம் விதித்தது.
மெட்டாவின் வாட்ஸ்அப்பில் தனியுரிமையை அமல்படுத்தியதற்காகவும், பயனர் தரவுகளை திருடியதற்காகவும் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
வாட்ஸ்அப்பில் தனியுரிமைக் கொள்கைகள் தவறாகப் பயன்படுத்தியதால் தவறாக செயல்படுத்தப்பட்டது என்றும் அத்துடன் பயனர் தரவு தவறாக சேகரிக்கப்பட்டு மற்ற நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வாட்ஸ்அப் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிசிஐ தெரிவித்துள்ளது.
சிசிஐ, மெட்டாவுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன், மேலும் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தளத்தில் சேகரிக்கப்பட்ட பயனர் தரவை விளம்பரத்திற்காக மற்ற மெட்டா தயாரிப்புகள் அல்லது நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மெட்டாவிற்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளம்பரம் தவிர மற்ற நோக்கங்களுக்காக, வாட்ஸ்அப்பின் கொள்கையில் மற்ற மெட்டா குழும நிறுவனங்களுடன் பகிரப்பட்ட பயனர் தரவு அல்லது நோக்கத்தைக் குறிப்பிடும் தயாரிப்புகள் பற்றிய விரிவான விளக்கமும் இருக்க வேண்டும் என்று சிசிஐ தெரிவித்து , இனி வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் இது தவிர, அதை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மெட்டாவுக்கு சிசிஐ உத்தரவிட்டுள்ளது.
பினனர் வாட்ஸ்அப் சேவையை பயனர்களுக்காக நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்றும் சிசிஐ தெரிவித்துள்ளது.மெட்டா அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய காரணத்துக்காக மெட்டாவுக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது சிசிஐ.
இதற்கிடையில், இன்று வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக மெட்டாவுக்கு சிசிஐ விதிகப்பட்ட ரூ.213 கோடி அபராதத்தை எதிர்த்து கண்காணிப்பு ஆணையத்தின் முடிவு குறித்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களையும் மெட்டா நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.