திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,பொருளாளர், முதன்மைச் செயலாளர்,துணை பொதுச்செயலாளர்கள், மற்றும் உயர்நிலை செயல்திட்ட குழுவில் உறுப்பினர்களாக உள்ள தயாநிதிமாறன் டி.கே.எஸ் இளங்கோவன்,எ.வ.வேலு,ஜெகத்ரட்சகன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம உள்ளிட்ட 19 உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும்,திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் இந்த உயர்நிலை செயல் திட்ட குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.