சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியிருந்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 3D தொழில்நுட்பத்தில் ஹை பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். மேலும் வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. இருப்பினும் படத்தின் திரைக்கதை வலுவாக இல்லாததாலும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படக்குழுவினர் பல திருத்தங்களை செய்து 12 நிமிட காட்சிகளை நீக்கி நேற்று முதல் கங்குவா திரைப்படத்தை திரையிட்டுள்ளனர். அதேசமயம் திரைப்பிரபலங்கள் பலரும் கங்குவா படத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அடுத்தது இந்த படம் உலக அளவில் கிட்டத்தட்ட 127 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் வேலூரில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அங்கு சிறுத்தை சிவாவையும் சூர்யாவையும் கண்ட ரசிகர்கள் ஓடி வந்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.