Homeசெய்திகள்க்ரைம்பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

-

பிரபல  ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம், அதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

 

சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் என கூறப்படும் பிரபல ரவுடிகள் எலி யுவராஜ், ஈஷா என்கிற ஈஸ்வரன் இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதில் திருந்தி வாழ வாய்ப்பு வழங்க கோரி குடும்பத்தினருடன் வந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது 2017 க்கு பிறகு சம்பவம் செந்திலுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை ஒன்றே முக்கால் வருடம் சிறை வாசத்திற்கு பிறகு சேலம் சிறையில் இருந்து கடந்த வாரம் வெளிவந்திருக்கிறோம். எங்களால் எங்களது குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டனர். எங்களால் இதற்கு மேல் ஓட முடியவில்லை.
எனவே திருந்தி சுயதொழில் செய்து பிழைக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, சேலம் சிறையில் இருந்த எங்களிடமும் போலீசார் விசாரித்தார்கள். எங்களுக்கு சம்மந்தமில்லை என்பதால் விட்டு விட்டார்கள் என்று கூறினார்கள்.

எலி யுவராஜ் மீது மொத்தம் 15 வழக்குகள் உள்ளது. 2013- திருவொற்றியூர் தாடி சுரேஷ் கொலை வழக்கு. 2014- ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சையில் இருந்த ரவுடி பொக்கை ரவி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2015
சூனாம்பேடு வழக்கறிஞர் காமேஷ் கொலை வழக்கு, 2017- முத்தியால்பேட்டையில் காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை வழக்கு , அதற்கு மறுநாள் 2017-காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி ரவீந்திரநாத் திருப்போரூரில் கொலை என்று ஐந்து கொலை வழக்குகள் உள்ளன.

மேலும் 5 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்குகள் 2, இதர வழக்குகள் 3 என்று 15 வழக்குகள் உள்ளது.

அதேபோன்று ஈஷா என்கிற ஈஸ்வரன் மீது 26 வழக்குகள் உள்ளது.

2011 -திருவொற்றியூர் சுப்பிரமணி கொலை வழக்கு, 2013- தாடி சுரேஷ் கொலை வழக்கு. 2015 சூனாம்பேடு வழக்கறிஞர் காமேஷ் கொலை வழக்கு
2017- முத்தியால்பேட்டையில் காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை வழக்கு அதற்கு மறுநாள் 2017- காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி ரவீந்திரநாத் திருப்போரூரில் கொலை என்று ஐந்து கொலை வழக்குகள் உள்ளன.

மேலும் கொலை முயற்சி வழக்குகள் 12, கஞ்சா வழக்குகள் 2, இதர வழக்குகள் 7 ஆக 26 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் திருந்தி வாழப் போவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது

MUST READ