நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் பிரதர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, ஜீனி, JR 34 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது இவர், புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன்படி சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படத்தில்தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் SK 25 (புறநானூறு) என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. பின்னர் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதே சமயம் நடிகை நஸ்ரியாவும் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பதிலாக ஜெயம் ரவியும் நஸ்ரியாவிற்கு பதிலாக ஸ்ரீ லீலாவும் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.