நூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் நெருப்பு. ராஜாவாக வாழ்ந்த பொதுமக்கள் அகதிகளாக மாறியுள்ள பரிதாபம். இந்தியாவில் முதன்மையான நிலக்கரி சுரங்கத்தின் உண்மை முகம்.
இந்திய நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் முதன்மையாக கருதப்படுவது ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கிஜிரா நிலக்கரி சுரங்கம். தன்பாத் மாவட்டத்தில் மட்டும் 112 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் கிஜிரா பகுதியில் மட்டும் 453 சதுர கிலோமீட்டர் அளவிற்கு தற்பொழுது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இங்கு முதன் முதலாக 1894 ஆம் ஆண்டு நிலத்தடி நிலக்கரி சுரங்கம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு இங்கு முதன்முதலாக நிலத்திற்கு அடியே உள்ள சுரங்கத்தில் தீ பற்றி எரியத் துவங்கியது. நிலத்திற்கு கீழ் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணில் அடங்காத நிலக்கரி படிந்து இருக்கும் நிலையில் பற்றி கொண்ட நெருப்பு நூற்றாண்டை கடந்தும் இதுவரை அணைக்கப்படாமல் பற்றி எரிந்து வருகிறது.
சில கிலோமீட்டர் அளவில் முதன் முதலாக நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதற்காக தற்பொழுது வரை நூற்றுக்கணக்கான கிராமங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டது. 23 பெரிய நிலத்தடி மற்றும் ஒன்பது பெரிய திறந்தவெளி சுரங்கங்களைக் கொண்டு தற்பொழுது நிலக்கரி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிலக்கரி சுரங்கத்தை பெரிதாக்குவதற்காக ஒவ்வொரு கிராமங்களாக கையகப்படுத்தி வந்த அரசு, சுமார் ஒன்றரை லட்சம் பொதுமக்களை இதற்காக வெளியேற்றி ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய மறுவாழ்வு மையத்தை உருவாக்கி அதில் குடிய அமர்த்தினர். அவர்களுக்கு உரிய நிலம், கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் புதிய குடியிருப்பு புலம்பெயர்ந்தனர்.
ஆனால் அரசு அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி எந்தவித உத்தரவாதத்தையும் நிறைவேற்றாத நிலையில் அங்கு வாழும் மக்கள் இதுவரை தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு இன்றி, கல்வி இன்றி திண்டாடி வரும் இந்த பொதுமக்கள் பலர் சட்டவிரோதமாக நிலக்கரிகளை எடுத்து அதை மாஃபியாக்களிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பலர் வெளியூருக்கு வேலை தேடி சென்றுள்ள நிலையில் உள்ளூரில் இருக்கும் சிலர் தாங்கள் வாழ்ந்த இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் அடிமைகளைப் போல் தின கூலியாக வேலை செய்து வருகின்றனர். பெண்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
சிலர் குடும்பமாக நிலக்கரி சுரங்கத்திற்கு சட்டவிரோதமாக சென்று அங்குள்ள நிலக்கரிகளை திருடி வெளியே எடுத்து வந்து அதை விற்று பிழைத்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை அவர்களுக்கு நெருக்கடியும் கொடுத்து வருகிறது. மூன்று தலைமுறைக்கு மேலாக முகாமில் அகதிகளாக சிக்கித் விரித்து வரும் பொது மக்களுக்கு விடியல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் இதுகுறித்து, ‘‘மோடி எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டார். எங்கள் குழந்தைகளை மதுவுக்கு அடிமையாக்கி திருடர்களாக மாற்றிவிட்டார்’’ எனக் கண்ணீர் வடிக்கின்றனர்.