காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த படத்தை வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என நம்பப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘என்னை இழுக்காதடி’ எனும் முதல் பாடல் நாளை (நவம்பர் 22) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.