Homeசெய்திகள்அரசியல்தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது - அமைச்சர் சி.வி கணேசன்

தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – அமைச்சர் சி.வி கணேசன்

-

இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் மாநிலம் தமிழ்நாடு என தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது - அமைச்சர் சி.வி கணேசன்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் தொழிலாளர் நலன் துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இருங்காட்டுகோட்டையில் உள்ள ஹுன்டாய் தொழிற்சாலையில் நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலை சார்ந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு குறிப்பாக உயரமான பணி இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் முக்கியதுவம் வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்களுக்கு விபத்து இல்லாத சூழலை தொழிற்சாலை உருவாக்க வேண்டும் அதற்கான நடவடிக்கையில் தொழிற்சாலைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது.ஒரே மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலை செயல்படுவது இங்கு தான். இங்குள்ள 700 க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதில்லை. பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்படக் கூடாது என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன் விளைவாக இந்த ஆண்டு ஒரு உயிர் இழப்பு கூட இல்லாத தீபாவளியை நாம் கொண்டாடியுள்ளோம்.பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு கலைஞர் கொண்டு வந்த 50 ஆயிரம் இன்சூரன்ஸ் இருந்து வந்தது.

ராஜ்நாத் சிங்குடன் ஸ்டாலின் இருக்கலாம்… விஜயுடன் திருமா உட்காரக் கூடாதா?-சர்ச்சை

20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது முதலமைச்சர் முயற்சியால் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பணியில் இருந்து இறக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உடனடியாக 5 கோடி நிதியை முதல்வர் அந்த மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் 43 சதவிகிதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு முதல்வரின் முயற்சியால் இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடத்தை நோக்கி செல்வதாக அவர் தெரிவித்தார். இதில் துறைதுறை செயலாளர் வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

MUST READ