ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பிரதர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர் ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் வினய் ராய், யோகி பாபு, ஜான் கொக்கேன், வினோதினி, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படமானது டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 22) வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.