மலையாள சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் தனித்தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கின்றனர். தனது நடிப்பினால் இருவரும் தங்களுக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கோலாட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தினை டேக் ஆஃப், மாலிக் ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மற்றுமொரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அதன்படி மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று சொல்லப்படும் பகத் பாசில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
மேலும் நடிகர் பகத் பாசில், கடைசியாக ஆவேஷம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.