10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் பணப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் நாதமுனி கோவில் தெருவை சேர்ந்தவர் சுகிதா(46). இவரது கணவர் எலக்ட்ரிக்சனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சுகிதா மற்றும் அவரது அக்காவான சுகந்தாவின் மகன் ரிதிஷ் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று ரிதிஷ்க்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதால் அதற்கு பணம் கட்ட வேண்டி சுகிதா 3 லட்ச ரூபாய்க்கு பணத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுனரான தனது அண்ணன் லூர்து ராஜ் என்பவருடன் ஆட்டோவில் வந்துள்ளார். பின்னர்
அமைந்தக்கரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ராஜ்பவன் ஓட்டல் வாசலில் ஆட்டோவை நிறுத்தி சாப்பாட்டு வாங்குவதற்கு உள்ளே சென்ற நிலையில் அவரது அண்ணன் லூர்து ராஜ் மட்டும் ஆட்டோவில் தனியாக இருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் ஆட்டோ ஓட்டுனர் லூர்து ராஜிடம் ஆட்டோ பின்பக்க சக்கரம் அருகே 10 ரூபாய் பணம் கிடப்பதாக கூறி உள்ளனர். உடனே லூர்து அந்த பணம் என்னுடையது தான் என்று கூறி கொண்டு பணத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுகிதா ஆட்டோவில் வைத்திருந்த 3 லட்ச ரூபாய் பணப்பையை திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
லூர்து ராஜ் சாலையில் கிடந்த 10 ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து பார்த்த போது ஆட்டோவில் இருந்த பணப்பையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சாப்பாடு வாங்கி கொண்டு வெளியே வந்த சுகிதாவிடம் நடந்தவற்றை லூர்து கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகிதா இச்சம்பவம் குறித்து அமைந்தக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நடிகை சீதா வீட்டில் 4.5 சவரன் தங்க நகை திருட்டு, வீட்டில் வேலை செய்பவா்களிடம் போலீஸார் விசாரணை