Homeசெய்திகள்அரசியல்தவெக-வில் பதவி வாங்கித் தருவதாக வசூல் வேட்டை... பரிதாபத்தில் விஜய் கட்சி

தவெக-வில் பதவி வாங்கித் தருவதாக வசூல் வேட்டை… பரிதாபத்தில் விஜய் கட்சி

-

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டி விசாலையில் பிரம்மாண்ட்ட மாநாட்டை நடத்திக் காட்டினார். அதன் பிறகு உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தினர். பலரும் இந்த செயலி மூலம் தங்களை உறுப்பினர்களாக இணைத்து வருகின்றனர்.அதிமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக அறிவிப்பு

இது ஒருபுறம் இருக்க, கட்சியில் போஸ்டிங் வாங்கித் தருவதாக மாவட்ட பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் இளைஞர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக பகீர் கிளம்பி உள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களை குறிவைத்து வசூல்வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கோவையில் இந்த வசூல்வேட்டையை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதில் கிழக்கு மாவட்ட தலைவர், மாணவரணி தலைவர் இருவரும் சேர்ந்து கட்சியில் சேர்ந்தால் மாவட்ட பொறுப்பு வாங்கி தருவதாக கூறி, ரசிகர்களிடம் ரூ.10 ஆயிரமும், மாணவரணியில் பொறுப்பு வாங்கி தர ரூ.5 ஆயிரமும் வசூலித்து வருகிறார்கள். இவர்களது பேச்சை நம்பி இளைஞர்கள் பலரும் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது பணம் கொடுத்தவர்கள் நமக்கு பொறுப்பு வருமா, வராதா? என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள். தவிர, ஆட்கள் சேர்க்க பணம் கேட்டு வரும் விவகாரம் கட்சியில் இருக்கும் மற்றவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய்

கல்லா கட்டும் விஷயத்தை தெரிந்து கொண்ட மற்ற நிர்வாகிகளும் நாமும் இதே பாணியில் வசூல் வேட்டை நடத்தலாமே என்கிற சிந்தனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது தவெக மாவட்ட தலைவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக இருக்கிறார். அவர் ரசிகர்களை கட்டாயப்படுத்தி பாலிசி போட சொல்லி டார்ச்சர் கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். கட்சி மேலிடம் இதுபற்றி விசாரிக்குமா? இளைஞர்கள் பலர் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்னடா இது கட்சி ஆரம்பிச்ச உடனே இப்படி தன் கட்சிக்கு வரும் இளைஞர்களிடமே வசூல் வேட்டை நடத்துகிறார்கள். இவர்கள் தான் ஊழலை ஒழிக்கக் கிளம்பி வந்த உத்தமர்களோ என பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கவலை தெரிவிக்கிறார்கள்.

MUST READ