Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பும்ரா... 5 விக்கெட்டுக்களை அள்ளி சாதனை

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பும்ரா… 5 விக்கெட்டுக்களை அள்ளி சாதனை

-

- Advertisement -

ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துள்ளார் பும்ரா.

இந்திய அணியின் அதிரடி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டின் இரண்டாவது நாளில் அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கியதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சாதனையை படைத்தார்.

ரோஹித் ஷர்மா இல்லாத நேரத்தில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார் ஜஸ்பிரித் பும்ரா. உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் என அனைத்து பெரிய விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். பும்ரா 18-5-30 என்ற புள்ளிகளுடன் ஆட்டத்தை முடித்தார். அவரது அனுபவம், திறமையைப் பயன்படுத்தி, ஜஸ்பிரித் பெர்த்தின் வேகமான ஆடுகளத்தில் நம்பமுடியாத துல்லியத்தையும் வேகத்தையும் வெளிப்படுத்தினார்.

முதல் நாளில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் இரண்டாவது நாளில் 104 ரன்களில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்வது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு கடினமான இருந்தது. பும்ராவைத் தவிர, தனது முதல் டெஸ்டில் விளையாடிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பும்ரா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார், இதனால் இந்தியா 43 ரன்கள் முன்னிலை பெற உதவியது.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா இருவரையும் முதல் நாளிலேயே ஆறு ஓவர்களுக்குள் அவுட்டாக்கினார் பும்ரா. அவர் ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் செய்ததே போட்டியின் டர்னிங்க் பாயிண்டாக அமைந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பும்ரா நெருக்கடியை ஏற்படுத்தினார். பும்ரா தனது கடைசி ஸ்பெல்லில் எதிரணி கேப்டன் கம்மின்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் (முதல் பந்திலேயே அவுட்) வெளியேற்றிய ஒரே பந்துவீச்சாளர் பும்ரா.

MUST READ