Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

-

- Advertisement -

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 2 தினங்களில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் இலங்கையை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25-ம் தேதி முதல்  4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நவம்பர் 25-ல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 27-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ