Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

-

- Advertisement -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில் சூரியஒளி மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதேபோல், மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தவும், சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்பவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஆதரவைக் கோரும் வகையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக எம்.பி, வைகோ உள்ளிட்ட 30 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதானி, மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.  வக்பு வாரிய மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டுமென திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பீகாருக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டுமெனவும், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களின் நலன்களை உறுதி செய்ய அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனவும் லோக்ஜனசக்தி எம்பி அருண் பாரதி வலியுறுத்தினார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர்,  திமுக சார்பில் இரு அவைகளில் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும்,  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்பதால் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பள்ளிக்கல்விக்கான சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி குறித்து அவைகளில் பேச உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். மேலும், நடப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்குவது, வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் ஆகியவை குறித்து திமுக தரப்பில் வலியுறுத்தி அழுத்தம் தரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

MUST READ