Homeசெய்திகள்சென்னைசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி சவரன் ரூ.55,480-க்கு விற்பனையான நிலையில், பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ. 2,920 அதிகரித்து நேற்று ரூ.58,400-க்கு விற்னையானது. தங்கம் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், சற்றே ஆறுதல் தரும் விதமாக இன்று தங்கம் விலை சவரணுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை தொடர்ந்து 7வது நாளாக மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,01,000-க்கு வர்த்தகமாகிறது.

MUST READ