Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நாளை ராஜினாமா

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நாளை ராஜினாமா

-

- Advertisement -

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நாளை பதவி விலகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் தொடர்ந்து முதல்வராக செயல்படுவார் என சிவசேனா கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நாளை சமர்பிப்பார் என்றும், புதிய முதல்வர், அமைச்சரவை பதவியேற்கும் வரை செயல் முதல்வராக தொடர்வார் என்றும் சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணை முதல்வர்கள்

முதல்வர் பதவிக்கான விவகாரம் பற்றி எதுவும் தற்போது விவாதிக்கப்படவில்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெளிவுபடுத்தினார். முதல்வர் பதவிக்கான முடிவை மஹாயுதி கூட்டாளி கட்சிகள் கூடி முடிவெடுக்கும் எனவும் அஜித் பவார் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்கட்சிகள் எதுவும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற போதுமான எண்ணிக்கை கூட இல்லை.

சட்டமன்றத் தேர்தலில் மகாயுதியின் வெற்றியில் அரசின் லாட்லி பெஹன் திட்டம் முக்கியப் பங்காற்றியது. இத்திட்டம் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. நவம்பர் 27ஆம் தேதிக்கு முன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் கிளப்பப்படுகின்றன. ஆனால் அப்படி எதுவும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவரை முன்னிறுத்தும் அளவுக்கு ஒரு எதிர்க்கட்சிக்குக் கூட போதிய எண்ணிக்கைப் பலம் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி இப்போது எங்களிடம் உள்ளது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள், பிற உறுப்பினர்களை மதிக்கும் பாரம்பரியத்தை ஃபட்னாவிஸும் ஷிண்டேவும் கடைபிடிப்பார்கள்’’ என்றும் அவர் தெரிவித்தார்.மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணை முதல்வர்கள்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகளின் கூட்டணியான மஹாயுதி 288 இடங்களில் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணை முதல்வர்கள்

முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராகக் கருதப்படும் பாஜக தலைவரும், பதவி விலகும் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் மீதுதான் அனைவரது பார்வையும் உள்ளது. ஏனெனில் பாஜக 149 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் வெற்றி பெற்றது.

MUST READ