கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா எனும் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி எனும் திரைப்படத்தையும் இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்க உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க போகிறார் என்று புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகர் ஜெயம் ரவி ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இவ்வாறு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் ஜெயம் ரவி, கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதேசமயம் இந்த படத்தின் கதையானது ஜெயம் ரவியின் வாழ்க்கைக்கு தொடர்புடைய கதையாக இருக்கும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பான கதைக்களத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது. எனவே கார்த்திக் யோகி இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள புதிய படம் எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -