Homeசெய்திகள்க்ரைம்ஆபாச படத்தை வெளியிடுவேன்...பிரிந்த மனைவியை  மிரட்டிய கணவர் கைது

ஆபாச படத்தை வெளியிடுவேன்…பிரிந்த மனைவியை  மிரட்டிய கணவர் கைது

-

- Advertisement -


கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்த மனைவியை பழிவாங்கியது அம்பலமானது. என்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை மற்றும் பல்வேறு ஆபாச படங்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக எனக்கும் என் உறவினர்களுக்கு அனுப்பி நான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டுமென மிரட்டுகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் மற்றும் whatsapp எந்த ஊரில் இருந்து உபயோகப்படுத்துகிறது என்பதை கண்டறிந்து செல்போன் மூலமாக செயல்படுவது என்பதை கண்டுபிடித்து காஞ்சிபுரத்தை சார்ந்த பாண்டியன் (30) என்ற நபரை திண்டிவனம் அருகே  கைது செய்துள்ளனர்.

பின்பு அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்த போது, மேற்படி நபர் அந்த பெண்ணின் இரண்டாவது கணவர் என்றும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தும், காஞ்சனா தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி அவரை பிரிந்து தனியாக வந்து விட்டது தெரியவந்தது. மேலும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னை நான் அசிங்கப்படுத்துவேன் என்று இந்த புகைப்படங்களை எல்லாம் காஞ்சனாவுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

பெண்ணினுடைய தனிப்பட்ட புகைப்படங்களை அந்த பெண்ணிற்கும் மற்றும் உறவினர்களுக்கு எல்லாம் அனுப்பிய காரணத்தினால் இணைய வழி சட்டத்தின்படி மேற்படி நபரை காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆபாச புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இது பற்றி சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை எடுப்பது மற்றவர்களுடன் பகிர்வதால் பின்னாளில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அல்லது அந்த புகைப்படங்களை வீடியோக்களை வைத்துக்கொண்டு மிரட்டப்படுகிறார்கள். தனிப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் கவனத்துடனும் பெண்கள் செயல்பட வேண்டும் என்றார்.

ஸ்பா என்ற பெயரில் அதிகரித்து வரும் பாலியல் தொழில்; போலீசார் ஆசியுடன் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார்

MUST READ