Homeசெய்திகள்இந்தியாவானில் வட்டமடித்த விமானம் - கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

-

- Advertisement -

கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கின.

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இதுவரையில், 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள், தாமதம் ஆகி உள்ளன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலைய பகுதியில், பலத்த மழை பெய்வதால், விமானங்கள் மிகுந்த பாதுகாப்புடன் தரை இயக்கப்படுகின்றன. ஓடு பாதையில் தண்ணீர் இல்லை என்பதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உன்னிப்பாக கவனித்து, அதன் பின்பே விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கின்றனர்.

இதை அடுத்து சென்னையில் தரையிறங்குவதற்காக, மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருவனந்தபுரத்திலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோவையிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானிலை வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

இந்த நிலையில் அவ்வப்போது மழை சிறிது ஓயும் போது, போடு பாதையில் தேங்கிய தண்ணீர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, இந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கி கொண்டு இருக்கின்றன.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான ஹைதராபாத், டெல்லி, செகந்திராபாத், மும்பை, லக்னோ உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக, இதுவரையில் 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 15 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன.

மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் ஆனால் தொடர்ந்து பல்வேறு விமானங்கள் தாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!

MUST READ