Homeசெய்திகள்சென்னைமொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது - ஆர் என் ரவி

மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி

-

மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது - ஆர் என் ரவி

இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசி உள்ளார்.

தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம் நிகழ்ச்சி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேசிய சட்ட தின விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழி ஏற்று கொண்டு பின்னர் பேசுகையில்,

சட்ட தினத்திற்கும், 10 ம் ஆண்டு விழாவிற்கும் எனது வாழ்த்துகள், உலகில் இந்தியா பெரிய பொருளாதார நாடு, கனவு நிறைவடைய பயணம் செய்ய வேண்டும், 75 ஆண்டு கால பயணம் சிறிய தூரத்தில் வந்து விடவில்லை. செய்தி தாள்களில் பார்த்தால் சமூக நீதி குறித்த செய்திகள் வருகிறது. குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அறுவறுக்கத்தக்க செயல் செய்தனர்.மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது. சுதந்திரத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். தற்போது புதிய பாரதம் உருவாகி வருகிறது.

இன்னும் சமூக நீதி தீண்டாமை உள்ளது.மொழியை வைத்து பிரிவினையில் ஈடுபடுகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவோம். சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு அரசியல் கட்சிக்கு சொந்தமானது இல்லை, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. தீண்டாமை கொடுமை உள்ளது அது மிகவும் ஆபத்தானது. மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது.

2015 வரை சட்ட தினமாக கொண்டப்பட்டு வந்தது மோடி பதவி ஏற்ற பின்
அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வடக்கு தெற்கு, கிழக்கு மேற்கு என பிரிவினை இருந்தது அரசியல்வாதிகளால் அது செய்யப்பட்டது. இந்தியா என்பது ஒரே நாடு. இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என பேசினார்.

சீமான், விஜய் வார்த்தை மோதல் – நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்…

MUST READ