தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மூத்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி,கல்லூரி மாணவ மாணவியருக்கு உதவித்தொகை, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ஆகியவற்றை திமுக சார்பில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன்னதாக மேடையில் உரையாற்றிய துணை முதலமைச்சர், இந்த நிகழ்ச்சி நடத்துவது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு,நிகழ்ச்சி நடக்கும் இடம் தந்தை பெரியார் திடல்.முதலமைச்சர் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்று இருக்கிறோம், அந்த வெற்றி தான் நமக்கு கிடைத்த சான்றிதழ். 40க்கு – 40 தொகுதி வென்று உள்ளோம்…வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியம். குறைந்தது 200 தொகுதிகளை வென்றெடுப்போம் என்ற உறுதிமொழியை கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஒரு திராவிட மாடல் நிகழ்ச்சி, எல்லோரும் திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்கிறார்கள், எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு என கூறினார்.அந்த வகையில் தான் இன்று அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இன்று 1335 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என கூறினார்.வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு நீங்கள் தயாராக வேண்டும்,அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுகொண்டார்.
7 ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்கப் போவது உறுதி,இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது உறுதி என கூறினார். அதிமுக கள ஆய்வு என்று சொல்லி ஒவ்வொரு இடத்திலும் கலவர ஆய்வு தான் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என விமர்சனம் செய்த துணை முதலமைச்சர், கூட்டணிக்கு வாருங்கள் என்று சொன்னால் 100 கோடி கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கள ஆய்வு கூட்டத்தில் ஓபன் ஆகவே பேசுகிறார் என கூறினார்.தேர்தல் வேலைகளை திமுக தொடங்கிவிட்டது. தேர்தல் ரிசல்டில் நாம் தான் முதலில் வருவோம்…மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி உள்ளது, குறிப்பாக தாய்மார்களிடம் அதிக அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும் சட்டமன்ற தேர்தலை நோக்கி நாம் உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.
அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக – நாஞ்சில் சம்பத்