Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் பரவும் 'சூர்யா 45' பூஜை வீடியோ!

இணையத்தில் பரவும் ‘சூர்யா 45’ பூஜை வீடியோ!

-

சூர்யா 45 படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையத்தில் பரவும் 'சூர்யா 45' பூஜை வீடியோ!

நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. அதை தொடர்ந்து தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார். இணையத்தில் பரவும் 'சூர்யா 45' பூஜை வீடியோ!ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் உருவாகப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இணையத்தில் பரவும் 'சூர்யா 45' பூஜை வீடியோ!மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 27) இந்த படத்தின் பூஜை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் வைத்து நடைபெறுகிறது. இந்த பூஜை விழாவில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாளை (நவம்பர் 28) கோவையில் தொடங்கி டிசம்பர் 27 வரை படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாம். அடுத்தது இந்த படத்திற்கு தெய்வீக தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து பல தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ