Homeசெய்திகள்சினிமாஃபெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் 'மிஸ் யூ' பட ரிலீஸ்!

ஃபெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ பட ரிலீஸ்!

-

நடிகர் சித்தார்த்தின் மிஸ் யூ படத்தின் ரிலீஸ் பெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஃபெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் 'மிஸ் யூ' பட ரிலீஸ்!

நடிகர் சித்தார்த் தற்போது எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படமானது நடிகர் சித்தார்த்தின் 40 வது படமாகும். இதற்கிடையில் இவர் ராஜசேகர் இயக்கத்தில் மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தினேஷ் பொன்ராஜ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்க கேஜி வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பால சரவணன், கருணாகரன், மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஃபெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் 'மிஸ் யூ' பட ரிலீஸ்!ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படமானது நாளை (நவம்பர் 29) திரைக்கு கொண்டுவரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெங்கல் புயல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ