Homeசெய்திகள்அரசியல்ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

-

- Advertisement -

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.இந்த நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்கின்றனர்.

81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில் மகாகட்பந்தன் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. 56 இடங்களில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் லெனினியம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள மகாகட்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராகவும், மாநிலத்தின் 14வது முதலமைச்சராகவும் இன்று ஹேமந்த் சோரன் பதவியேற்று கொள்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்குவார் சோரேனுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா இன்று ராஞ்சியில் நடைபெறும் நிலையில் இன்று ராஞ்சியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4  ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்

MUST READ