வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி இன்று மக்களவை எம்.பியாக முறைப்படி பதவி ஏற்று கொள்கிறார் – காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார்.
வயநாடு தொகுதியில் எம்பியாக இருந்த ராகுல் காந்தி அந்த பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து, அதனை நேற்று பிரியங்கா காந்தியிடம் டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
இந்த நிலையில், இன்று காலை பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்வார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை காலை 11 மணி அளவில் கூடியதும் மக்களவை உறுப்பினராக வயநாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி மற்றும் நாந்தோட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவான் ரவீந்திர வசந்தராவ் இருவரும் மக்களவையின் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் ராகுல் காந்தியும் மாநிலங்களவையில் சோனியா காந்தியும் உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது பிரியங்கா காந்தியும் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை – ராமதாஸ்