Homeசெய்திகள்சினிமாஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை..... எஸ்.பி.பி. சரண்!

ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!

-

- Advertisement -

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை..... எஸ்.பி.பி. சரண்!தற்போதுள்ள காலகட்டத்தில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புது புது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஏஐ தொழில் நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் திரைத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த தொழில்நுட்பமானது மறைந்த நடிகர் நடிகர்களை மீண்டும் திரையில் கொண்டு வரவும் அதே சமயம் அவர்களின் மறைந்த பாடகர்களின் குரலை திரும்ப கொண்டு வரவும் பயன்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விஜயின் கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் மனசிலாயோ எனும் பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு இந்த தொழில்நுட்பம் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை..... எஸ்.பி.பி. சரண்!இந்நிலையில் எஸ்.பி.பி. சரண், தன்னுடைய தந்தையும் மறைந்த பாடகர்மான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலையே தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தக் கூடாது என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதாவது எஸ்பிபியின் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்த பலரும் தங்களிடம் அனுமதி கேட்டு வருவதாக கூறிய எஸ்.பி.பி சரண், ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொண்டு வரப்படும் குரல் உணர்வுபூர்வமாக இருக்காது என்றும் அதுபோன்று ஏஐ மூலம் தனது தந்தையின் குரலை கேட்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

MUST READ