இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் குறித்து பேசி உள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய அமரன் திரைப்படம் இந்திய அளவில் பிரபலமாகி ராஜ்குமார் பெரியசாமிக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. இதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. மேலும் இந்த படமானது தனுஷின் 55வது படமாக உருவாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷ் குறித்து பேசி உள்ளார்.
“I have narrated script to #Dhanush sir on Dec 2023 (Before #Amaran release)🤝. He was very positive & down to earth. He is one of the powerful actors, excited to work with him🌟. Shooting begins in few months, after pre production🎬”
– RajkumarPeriyasamypic.twitter.com/HWpl0cejHi— AmuthaBharathi (@CinemaWithAB) November 29, 2024
அதன்படி அவர் பேசியதாவது, “தனுஷ் நடித்த எல்லா படமும் நான் பார்த்திருக்கிறேன். அவருடைய நடனம் பிடிக்கும். அமரன் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே நான் தனுஷை சந்தித்து கதை சொன்னேன். அவர் ஒரு பவர்ஃபுல்லான நடிகர். அவருடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ப்ரீ ப்ரொடக்சன் பணிகளுக்கு பிறகு இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.