Homeசெய்திகள்இந்தியாஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: வந்தனா ஷாவின் நம்பிக்கை வார்தை - புத்தாண்டுக்கான குட் நியூஸ் !

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: வந்தனா ஷாவின் நம்பிக்கை வார்தை – புத்தாண்டுக்கான குட் நியூஸ் !

-

- Advertisement -

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: வந்தனா ஷாவின் நம்பிக்கை வார்தை - புத்தாண்டுக்கான குட் நியூஸ் !
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா நல்ல விஷயம் சொல்லி இருக்காங்க .

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தன் வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து ரஹ்மான் ட்வீட் செய்தார்.

ரஹ்மான் - சாய்ரா தம்பதிக்கு கதீஜா (28), ரஹீமா மற்றும் அமீன் (21) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இது குறித்து பேட்டி ஒன்றில் வந்தனா ஷா கூறியதாவது,

விவாகரத்துக்கு பிறகு பிள்ளைகள் யாருடன் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பிள்ளைகள் அப்பா, அம்மா இருவரில் யாருடன் இருப்பது என்பதை தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் வயதும் அவர்களுக்கு இருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பெரிய தொகை பெறுகிறாரா சாய்ரா பானு என்ற கேள்விக்கு , ”சாய்ரா பானுவுக்கு பணம் முக்கியம் இல்லை” என்றார். அதே போல ஏ.ஆர். ரஹ்மானும், சாய்ரா பானுவும் சமாதான ஆகமாட்டார்கள் என நான் சொல்லவில்லை . விவாகரத்து விஷயத்தில் எதுவும் இறுதியாக முடிவாகவில்லை என சாய்ரா பானு தெரிவித்தார்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானும், மனைவியும் சமாதானமாக பேசி சேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதாக வந்தனா ஷா கூறியது பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

29 ஆண்டுகால திருமண வாழ்கை வாழ்ந்து வரும் ஏ.ஆர். ரஹ்மானும், சாய்ரா பானுவின் இந்த செய்தியை அறிந்த அனைவருக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ரஹ்மான் – சாய்ரா தம்பதிக்கு கதீஜா (28), ரஹீமா மற்றும் அமீன் (21) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு வாழ்கை அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது.
இந்த பரிவு பேச்சு வெறும் சலசலப்பாக மட்டும் ஓய்ந்து விடாதா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் மூன்று பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்ந்திட வேண்டும்  என  நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

அவர்கள் முடிவை மாற்றி கொண்டு இனைவதே  புத்தாண்டுக்கான குட் நியூஸ் ஆக இருக்கும்.

‘விடாமுயற்சி’ தீம் மியூசிக் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு வைரல்!

 

MUST READ