Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெஞ்சல் புயல் எதிரொலி: 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

-

- Advertisement -

வங்கக்கடலில் நிலவி வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து தற்போது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. புதுச்சேரிக்கு கிழக்கு – தென் கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. இது நாளை பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளனர்.

MUST READ