Homeசெய்திகள்தமிழ்நாடு கரையை கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்!

 கரையை கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்!

-

- Advertisement -

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வந்தது. சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவிய ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இது மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அடுத்த  3 முதல் 4 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ