Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

-

சென்னையில் மழைப்பொழிவு குறைந்தாலும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 144 நிவாரண மையங்களில் 4,904 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் 3 லட்சத்து 730 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இன்றிரவுக்குள் தண்ணீர் அகற்றப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், சென்னையில் மழைப்பொழிவு குறைந்து வருவதாகவும், எனினும், தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

DMK Govt. தி.மு.க அரசு

மேலும் அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு இதுவரை 2,648 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 2000-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

MUST READ