Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்னூர் சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல்

குன்னூர் சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல்

-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜார்ஜ் ஹோம்ஸ் என்ற சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல். மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு சோதனை.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உதகை உள்ளிட்ட இடங்களில் சர்வதேச பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு மர்ம நபர்கள் இ மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் உதகையில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தனர். இன்று குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சர்வதேச பள்ளியான ஜார்ஜ் ஹோம்ஸ் லைட்லா பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

பள்ளியின் நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடி குண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குன்னூரில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

 

MUST READ