நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் தமிழிலும் பல ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் கடந்த 2017-இல் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரின் திருமண உறவு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் நாக சைதன்யா. இருவரும் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று (டிசம்பர் 4) ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இரவு 8.15 மணிக்கு நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ராஜமௌலி, பிரபாஸ், சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ் பாபு, நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.