Homeசெய்திகள்சினிமாசூரியுடன் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை!

சூரியுடன் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை!

-

பொன்னியின் செல்வன் பட நடிகை ஒருவர் நடிகர் சூரியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.சூரியுடன் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை!

நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த வகையில் விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார் சூரி. அடுத்தது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் விடுதலை 2 திரைப்படமும் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூரி, விலங்கு எனும் வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. சூரியுடன் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை!இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். அடுத்தது இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ