Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.... அதிர்ச்சி தகவல்!

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்!

-

அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2.'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.... அதிர்ச்சி தகவல்! புஷ்பா 2 – தி ரூல் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தின் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று (டிசம்பர் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. புஷ்பா 1 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தைக் காண மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதன்படி இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் அதே சமயம் ஒரு சோக சம்பவமும் நடந்துள்ளது. அதாவது ஐதராபாத்தில் 39 வயதுடைய ரேவதி என்ற பெண் புஷ்பா 2 படம் பார்க்க வந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். 'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.... அதிர்ச்சி தகவல்!அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருகை தந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகவும் அதன் பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தினர் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ