ப்ளூ சட்டை மாறன் புஷ்பா 2 படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் ஒரு சினிமா விமர்சகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் யூடியூபில் ஒவ்வொரு படங்களையும் விமர்சனம் செய்யும் வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர். அந்த வகையில் இவர் எந்த படமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களை தன்னுடைய பாணியில் விமர்சித்து விடுவார். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 5) உலகம் முழுவதும் வெளியான புஷ்பா 2 படத்தையும் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி அவர் கூறியதாவது, “புஷ்பா 1 படமே எதுக்கு ஓடியது என்று தெரியவில்லை. இதில் இரண்டாம் பாகத்தை வேற எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல் பாதியாவது ஓரளவிற்கு நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. படத்தோட முதல் காட்சியிலேயே ஜப்பான் காரன் தமிழில் பேசுகிறான். இந்தியாவிலிருந்து அங்க போனவன் ஜப்பானிய மொழியில் பேசுகின்றான். முதல் பாதையில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் ஜவ்வாக இழுத்து இருக்கின்றனர். இந்த படத்தை அல்லு அர்ஜுன் தான் தனது தோளில் தங்கியுள்ளார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படி சுமந்து தான் அல்லு அர்ஜுனின் தோள்பட்டை ஒரு சைடு வாங்கிருச்சு போல. மொத்தத்தில் இந்த படத்தை பார்க்க மன தைரியம் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க சாம்.சி.எஸ் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் முதல் நாளில் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.