Homeசெய்திகள்சினிமாமூன்றாவது முறையாக இணையும் 'பில்லா' படக் கூட்டணி!

மூன்றாவது முறையாக இணையும் ‘பில்லா’ படக் கூட்டணி!

-

பில்லா படத்தின் கூட்டணி மூன்றாவது முறை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மூன்றாவது முறையாக இணையும் 'பில்லா' படக் கூட்டணி!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கார் ரேஸிங் பயிற்சியிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் பில்லா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தை மையமாக வைத்து மீண்டும் புதிதாக எடுக்கப்பட்ட படம். மூன்றாவது முறையாக இணையும் 'பில்லா' படக் கூட்டணி!இந்த படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மீண்டும் 2013 ஆம் ஆண்டு அஜித், விஷ்ணுவரதன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் கூட்டணியில் ஆரம்பம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் விஷ்ணு வரதன் நேசிப்பாயா எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்தது இவர் பில்லா 3 படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்றாவது முறையாக இணையும் 'பில்லா' படக் கூட்டணி!இந்த நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷ்ணு வரதனிடம் பில்லா 3 படம் எப்போது வரும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பில்லா 3 வராது. அதுக்கு பதிலாக வேற ஒரு படம் பண்ணலாம். அஜித் சார், யுவன், நான் ஆகியோரின் கூட்டணியில் ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.

எனவே இனிவரும் நாட்களில் விஷ்ணுவரதன் – அஜித் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ