Homeசெய்திகள்மாவட்டம்பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் - மதிவதனி

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி

-

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருவள்ளூர் மத்திய மாவட்ட தொழிலாளர்கள் அணி சார்பில் தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் O.R. நாகூர் கனி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய மதிவதனி, தமிழ்நாட்டில் 100 வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை, படிக்க அனுமதி இல்லை, வேலைக்கு செல்ல அனுமதி இல்லை என எல்லாம் மறுக்கப்பட்டது. அப்போது தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என திராவிடர் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனை 1953 அன்று அண்ணல் அம்பேத்கர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பெரும் முயற்சி செய்தார். ஆனால் அன்றைய சனாதன வாதிகள் இந்தத் தீர்மானத்தை தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதே தீர்மானத்தை 1989ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்நாட்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அந்த சட்டம் தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது என்றார்.

அன்று கஜா புயல், கொக்கி புயலின் அகோர தாண்டவத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வெள்ள பாதிப்பை பார்வையிடாமல் அன்றைய முதல்வர் எடப்பாடியார் தன்னுடைய மாமனார் வீட்டில் இருந்ததாக தற்போது செய்தி வந்துள்ளது.

2015, 2017,2018 ஆகிய வருடங்களில் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இல்லாத போதிலும் மக்களுடன் நின்று, மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் என்று மதிவதனி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், வடக்கு பகுதி செயலாளர் நாராயண பிரசாத், மேலும் பகுதி கழக செயலாளர்கள் ராஜேந்திரன், பேபி சேகர், பொன் விஜயன், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், மாணவர் அணி செயலாளர் ஜெரால்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பந்தயத்தில் இணைகிறதா ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’?

MUST READ