Homeசெய்திகள்சென்னைசென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

-

சென்னை பெரம்பூரில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகன் என்பவரை காவல் துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் மீது 3 கொலை வழக்குகள் பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர் மீது வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மாமூல் கேட்டு பலரை மிரட்டி வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் இன்று காலை 6 மணியளவில் ரவுடி அறிவழகனை பிடிப்பதற்காக துணை ஆணையர் தனிப்படை போலீசார் பெரம்பூர் பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே சென்றுள்ளனர்.

chennai gun shooting

இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவுடி அறிவழகன், தனிப்படை போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரவுடி அறிவழகன் மீது திரும்பி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காலில் காயமடைந்த அறிவழகனை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னையில் மேலும் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ