உலக அளவில் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். அதேசமயம் இவர் 7 முறை தேசிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது இசையில் காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து என்னை இழுக்குதடி எனும் பாடல் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் பல படங்களில் கமிட்டாகி வரும் ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்திலும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று (டிசம்பர் 8) வெளியிடப்பட்ட ஒளிப்பதிவாளர் குறித்த அறிவிப்பு போஸ்டரில் ஏ ஆர் ரகுமானின் பெயர் இடம்பெறாததால் ஏ ஆர் ரகுமான் சூர்யா 45 படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சூர்யா 45 படத்திற்கு யார் இசை அமைக்க போகிறார் என்று எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.
We’re thrilled to welcome @SaiAbhyankkar, a rising star in the music industry, to #Suriya45.@Suriya_offl @dop_gkvishnu @RJ_Balaji @prabhu_sr pic.twitter.com/O26KvV2uUV
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 9, 2024
இந்நிலையில் சூர்யா 45 படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் அபியங்கர், ‘கட்சி சேர’ எனும் ஆல்பம் பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடி யாரும் இல்லை எனவும் நடிகை திரிஷா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார் எனவும் ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.