Homeசெய்திகள்சினிமாசூறாவளி வேகத்தில் 1000 கோடியை நெருங்கும் 'புஷ்பா 2'!

சூறாவளி வேகத்தில் 1000 கோடியை நெருங்கும் ‘புஷ்பா 2’!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 இல் அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் ஆகியோரின் கூட்டணியில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சூறாவளி வேகத்தில் 1000 கோடியை நெருங்கும் 'புஷ்பா 2'!அதைத் தொடர்ந்து உருவாகியுள்ள புஷ்பா 2 – தீ ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறது. அதன்படி இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.சூறாவளி வேகத்தில் 1000 கோடியை நெருங்கும் 'புஷ்பா 2'! இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 294 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைத்தொடர்ந்து மூன்று நாட்களில் இப்படம் 621 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் தற்போது வரை 800 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இன்னும் சில நாட்களில் இப்படம் ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ